பாட்டியல் - நூற்பா எண் 112 |
255 |
யானைத்
தொழில்
872. நிலம்எழில் உயரம் நேர்ந்த வயது
குலம்அளவு இலக்கணம் மும்மதம் கோடல்
அடுத்திடின் கோறல்கண்டு அரசனை அறிதல்
தொடுத்தல் வஞ்சி யானைத் தொழிலாம்.
இஃது யானைத்தொழில் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: கிரிசரம் நதிசரம் வனசரம் ஆகிய நிலம், அவயவங்களின்
அளவு, ஏழு முழுஉயரம், தருண வயது, பிறந்த நிலத்தான் வீரம் பெறும் குலநன்மை, ஒன்பது முழ நீளமும்முப்பத்திரண்டு முழச் சுற்றும் உடைத்தாய
இலக்கணம், மும்மதம் கோடல், அடுத்த பொழுதிற்கோறல்,
அரசனைக்
கண்டு அறிதல் இவையிற்றை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடுதல்யானைத்
தொழிலாம் என்றவாறு.
(112)
ஒத்த நூற்பாக்கள்
‘மூவகை நிலனும் மூவகை நிறைவும்
பல்வகைத் தேயமும் எழுவகை உறுப்பும்
வருணமும் யாண்டும் ஐவகைக் கொலையும்
இருவகை நடையும் ஐவகை உணர்வும்
உடையோர்ப் பேணலும் உளப்படப் பிறவும்
எண்ணிய வேளாண் பாவின் நலம்பெற
எண்ணி உரைப்பது யானைத் தொழிலே.’
- பன். பாட். 270.
‘கிரிசரம் வனசரம் நதிசரம் என்றிவை
நிலைபெறு நிலன்என நிறுத்திசி னோரே.’
’’ 271
‘உயரமும் நீளமும் சுற்றும் அளவினில்
குறையாது இயல்வது நிறைஎனப் படுமே.’
’’ 272
|