256 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
‘பல்வகைத் தேயம் கொல்களிறு பிறக்கும்
பல்வகைத் தேயமும் என்மனார் புலவர்.’
- பன். பாட். 273
‘பாதம் நாலும் கையும் வாலதியும்
கோசமும் நிலனுறத் தீண்டுதல் குறியே.’
’’ 274
‘குலம்எனப் படுவது பலவகை வருணமும்
நலன்உற உரைக்கும் நலத்தது என்ப.’
’’ 275
‘நலம்மிகு வாழ்நாள் பொலிவுற இயம்புதல்
யாண்டுஎன மொழிப இயல்நெறிப் புலவர்.’
’’ 276
‘கையும்முற் கூறும் கடியபிற் கூறும்
கூர்ங்கோடு இரண்டும் கொலைத்தொகை வகையே.’
’’ 277
‘முன்னர் ஊன்றிய காற்குறி தன்னில்
பின்னர்ப்பதம் இடுவது தோரணம் என்ப.’
’’ 278
‘பிறழ விடுவது வக்கிரம், அதுவே
சாரிகை விகற்பமும் ஆகும் என்ப.’
’’ 279
‘நன்மை இயற்றலும் தீமை இயற்றலும்
பற்றிய நன்மை தீமை நினைத்தலும்
கயக்கறு காலம் நினைத்தலும் புலனே.’
’’ 280
‘வழுவாது உடையோர் ஏவல் இயற்றல்
உடையோர்ப் பேணல் என்மனார் புலவர்.’
’’ 281
‘அகவலும் உரித்துஎன அறைகுநர் உளரே.’
’’ 282
‘இசைந்த நிலம்குலம் ஒத்த எழிலோ(டு)
அசைந்த பிராயத் தளவும் - இசைந்தமதம்
துன்னவஞ்சி வீடுயிர்கோள் மன்னன் தொடர்ந்தணைத்தல்
சொன்னவஞ்சி யானைத் தொழில்.’
- வெண். பாட். செ. 33
‘பிறந்த நிலம்குலம் ஓக்கம்அளவு பிராயம் எழில்
சிறந்தமாக் கோபக் கிரமத்தில் விட்டாங்கு தீர்சினத்தால்
இறந்து உயிர்கோடல் செயக்கண்டு இறைகந்தினில் பிணித்தல்
அறைந்திடும் வஞ்சி உரன்உடை யானைத்தனி தொழிலே.’
- நவ. 48
|