பாட்டியல் - நூற்பா எண் 112,119 |
257 |
‘பாய்ந்திடுமும் மதத்தானைத் தொழில்நேர் கொல்லும்
படைக்களிற்றைக் கண்டரசன் பற்றிச் சேர்தல்.’
- சிதம். பாட். 40
‘பொருமதக் களிற்றைப் பொருநர் கண்டு
ஆடலில் சேர்த்தல் ஆனைத் தொழில்; இது
ஆசிரியம் வஞ்சியில் அமைவ தாமே.’
- பி. ம. 39
112
ஆற்றுப்படை
873. அரசர் பாவால் ஆற்றுப் படைமேல்
உரைசெய் தவையென்று ஓர்ந்தனர் கொளலே.
இஃது ஆற்றுப்படை இலக்கணம் மாட்டேற்றான் உணர்த்துகின்றது.
இ - ள்: ஆற்றுப்படையாவது, மேலே புறத்திணையின் கண்,
‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரத் தெரித்தஆற் றுப்படை’
- இ. வி. பு. 19
எனக்கூறிய பொருள்மேல் ஆசிரியப்பாவால் சொல்லைச் சேர்த்துப் பாடப்படுவது என்று ஆராய்ந்து
கொள்க என்றவாறு. ஓர்ந்து கொள்க என முற்றெச்சமாக்கிக் கொள்க.
(113)
ஒத்த நூற்பாக்கள்
‘புரவலன் பரிசில் கொண்டு மீண்ட
இரவலன் வெயில்தெறும் இருங்கா னத்திடை
வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்
|