258

258

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டுஅப்

     புரவலன் நாடுஊர் பெயர்கொடை பராஅய்

     ஆங்குநீர் செல்கஎன விடுப்பதுஆற் றுப்படை.’

                                      - பன். பாட். 320

 

     ‘ஓங்கிய அதுதான் அகவலின் வருமே.’      

’’    321

 

     ‘புலவராற் றுப்படை புத்தேட்கும் உரித்தே.’        

’’    322

 

     ‘ஒன்றாம் அகவலா ஒண்புலவர் யாழ்ப்பாணர்

     குன்றாத சீர்ப்பொருநர் கூத்தரே - என்றிவரை

     ஆங்கொருவன் ஆற்றுப் படுத்த பரிசறைந்தால்

     பாங்காய ஆற்றுப் படை.’          

 - வெண். பாட். செ. 30

 

     ‘புலவன்,

     நிறைந்த பொருநரைப் பாணரைக் கூத்தரை நீள்நிதியம்

     பெறும்படி ஆற்றுப் படுப்பன ஆசிரி யம்பெறுமே.’  

- நவ. 51

 

     ‘புகழ்அகவ லாற்புலவர் பாணர் கூத்தர்

     பொருநர்முத லவரையாற்று எதிர்ப்பா டாகப்

     பகருமது ஆற்றுப் படையாம்.’                  

 - சித. பாட். 35

 

     ‘ஆற்றுப்படை என்ப ஆற்றெதிர்ப் படுத்திய

     புலவர் பாணர் பொருநர் கூத்தர்

     பலபுகழ் அகவற் பாவொடு பாடலே.’             

- தொ. வி. 266

 

     ‘விறலியர் பாணர் கூத்தர் பொருநர் என்று

     ஓது நால்வருள் ஒருவரை அகவலால்

     அங்கொரு தன்மை ஆற்றுப் படுத்துப்

     பகர்வது ஆற்றுப் படையென மொழிப.’        

 - பி. ம. 25

 

          ‘உயர்விறலி பாணர் கூத்தர்

பலபொருநர் இந்நால் வரில்ஒருவர் பரிசுஉதவு

     பரிசினுக்கு ஏகு வாரைப்

 பரிசுஉற்று வருவோர்கள் ஆற்றினிடை யேகண்டு

     பரிசு உதவு தலைவன் கொடைநிலை

கீர்த்தி கொற்றமும் சாற்றல் ஆற்றுப்படை.’                

- பி. தீ. 21