பாட்டியல் - நூற்பா எண் 113,114 |
259 |
‘அகவற் பாவால் விறலி பாணர்
கூத்தர் பொருநர் நால்வருள் ஒருவர்
பரிசிற் குப்போ வாரைப் பரிசு
பெற்று வருவார் ஆற்றிடைக் கண்டு
தலைவன் கீர்த்தியும் கொடையும் கொற்றமும்
அறைவது ஆற்றுப் படையா கும்மே.’
- மு. வீ. யா. ஒ. 129
113
தூது
874. பயில்தருங் கலிவெண் பாவி னாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்துறு தூதுஎனப்
பாட்டியல் புலவர் நாட்டினர் தெளிந்தே.
இது தூது இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: அகலக்கவியில் பயின்று வரும் கலிவெண்பாவினாலே பாணன்
முதலாகப் பாங்கன் ஈறாக விடுக்கும் உயர்திணை இருபாலினையும், கேளா
மரபினவற்றைக் கேட்பனவாகக்
கூறி விடுக்கும் அன்னமும் கிளியும் வண்டும்
மயிலும் குயிலும் முதலாயின அஃறிணைப் பொருளையும்,
இளையகலாம்
முதியகலாம் இவற்றின் துனி நீக்கற்கு வாயிலாக விடுத்தல் முன்னர்
உடன்படுத்தும் தூதுஎனப்
பாட்டிலக்கணத்தை உணர்ந்த புலவர் ஆராய்ந்து
கூறினார் என்றவாறு.
இத்துணையும் அகலக்கவி இலக்கணம் கூறினார். (114)
ஒத்த நூற்பாக்கள்
‘இருதிணையை விடல்தூது.’ - சித. பாட். 38
|