260 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
‘இருதிணை யுடன்அமை இயலை உரைத்துத்
தூதுசொல விடுவது தூது; இது கலிவெண்
பாவினால் விரித்துப் பகருவது மரபே.’
- பி. ம. 33
114
‘ஆணும் பெண்ணும் அவரவர் காதல்
பாணன் முதலிய உயர்திணை யோடும்
கிள்ளை முதலிய அஃறிணை யோடும்
சொல்லிய தூது போய்வா என்னக்
கலிவெண் பாவால் அறைவது தூது.’
- மு. வீ. யா. ஒ. 151; தொ. வி. 283. உரை
அகலக்கவிக்குச் சிறப்புவிதி
815. அகப்பொருள் கூறும் ஆசிரி யத்துள்
புகப்பெறா வஞ்சி யடி,பொரு ளன்றி
மிகக்கலி வாரா, மேவும் வஞ்சி
தொகைப்பெறா, தனித்துச் சொல்லப் படுமே.
இது மேல் கூறப்பட்ட அகலக்கவிகளில் சிலவற்றிற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது.
இ - ள்: அகப்பொருளைக் கூறும் ஆசிரியப்பாவினுள் வஞ்சியடி உறல்
ஆகா; அவ்வகப் பொருளினன்றி
ஏனைய பொருள்மேல் பெரும்பான்மையும்
கலி வாரா; வஞ்சிப்பாத் தொகை பெற்று நிற்கப்பெறா, தனித்துச்
சொல்லப்படும் என்றவாறு.
(115)
ஒத்த நூற்பாக்கள்
‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரிய தாகும் என்மனார் புலவர்.’
- தொ. பொ. 53
|