பாட்டியல் - நூற்பா எண் 113,114 |
261 |
என்பதனால் அகப்பொருளுக்குக் கலிப்பாவே மிக ஏற்றது. ஆசிரியமும்
வெண்பாவும் அகம்புறம் இரண்டிற்கும்
உரிய; வஞ்சி அகத்திற்கு ஏலாது
என்பது போந்த பொருளாகக் கொள்க.
‘ஆய அகப்பொருள்மேல் ஆசிரியப் பாவினுள்
மேயசீர் வஞ்சியடி மேவாது - தூய
அகப்பொருள் மேலன்றி அருங்கலிகள் வாரா
தொகப்பெறா வஞ்சி தொடர்ந்து.’
- வெண். பா. செ. 43
115
அகலக் கவிக்குப் பெயரிடுமாறு
876. பொருள்இடம் காலம் தொழில்உறுப்பு எல்லை
செய்தோன் செய்வித் தோன்பெய ராலே
எய்தும் அகலக் கவிக்குஇடும் பெயரே.
இஃது அகலக்கவியுள் சிலவற்றிற்குப் பெயராமாறு விதந்து கூறுகின்றது.
இ - ள்: பொருளானும் இடத்தானும் காலத்தானும் தொழிலானும்
உறுப்பானும் அளவானும் செய்தோன்
பெயரானும் செய்வித்தோன்
பெயரானும் அகலக்கவி பெயர்பெறும் என்றவாறு.
பொருள்பற்றி வந்தன ஆசாரக்கோவை முதலியன; இடம்பற்றி வந்தன
மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை
என்பன; காலம் பற்றி வந்தன
வேனில்விருத்தம், வசந்தமாலை என்பன; தொழில் பற்றி வந்தன
யானைத்
தொழில், ஊசல் முதலியன; உறுப்புப்பற்றி வந்தன பயோதரப்பத்து
நயனப்பத்து முதலியன; செய்தோன்
பெயர்பற்றி வந்தன அகத்தியம்,
தொல்காப்பியம் முதலியன; செய்வித்தோன் பெயர்பற்றி வந்தன
பாண்டிக்கோவை முதலியன. பிறவும் அன்ன.
(116)
|