262 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
ஒத்த நூற்பாக்கள்
‘தொடர்ந்த பெயர்கள் தொழில்அளவு காலம்
இடம்பொருள் பாஉறுப்போ(டு) எல்லை - நுடங்கிடையாய்
பாடினான் பாடுவித்தான் பாடப் படுபொருளான்
நீடும் பிறவும் நிறைந்து.’
- வெண். பாட். 45
‘பேசின்முதல் நூல்பொருளோடு அளவு தன்மை
செறிமிகுதி செய்வித்தோன் கருத்த னாலும்
திகழுமிடு குறியானும் நூற்குப் பேராம்.’
- சித. பாட். 43
‘ஆசில் முதல்நூல் பொருளோடு அளவு
தன்மை மிகுதியே செய்வித்தோன் கருத்தன்
இடுகுறி இவற்றான் எய்தும் பெயரே.’
- பி. ம. 43
‘தொகைநிலை பலரால் சொல்லப் பட்டுப்
பலபாட் டாக வருநவும் ஒருவரால்
பகரப் பட்டுப் பலபாட் டாக
வருநவும் ஆம்என வழுத்தினர் புலவர்.’
- மு. வீ. அ. செ. 2
‘அவைதாம்,
கருதரு பொருள்இடம் காலம் தொழில்எனும்
நான்கினும் பாட்டினும் அளவினும் நடக்கும்.’
’’ 3
116
பாவிற்கு வருண உரிமை
877. மறையோர் மன்னர் வணிகர்சூத் திரர்க்கு
முறையான் வெள்ளை முதல்நான்கு எய்தும்.
இது செய்யுளியலுள் கூறிய வெண்பா முதலிய நான்கு பாவிற்கும் வருணஉரிமை கூறுகின்றது.
இ - ள்: அந்தணர் முதலிய நான்கு வருணத்தவர்க்கும், முறையானே
வெண்பா அந்தணர்க்கு உரிய பா
என்றும், அகவல் அரசர்க்கு உரிய பா
என்றும், கலிப்பா
|