பாட்டியல் - நூற்பா எண்
117,118 |
263 |
வணிகர்க்கு உரிய பா என்றும் வஞ்சிப்பா சூத்திரர்க்கு உரிய பா என்றும்
பெயர் பெற்று நடக்கும்
என்றவாறு.
(117)
ஒத்த நூற்பாக்கள்
‘அந்தணர் சாதி ஆகிய வெள்ளை.’
- பன். பாட். 162
‘காவலர் சாதி ஆகிய அகவல்.’
’’ 163
‘நெடுநிலைக் கலியே வணிகர் சாதி.’
’’ 164
‘எஞ்சிய வேளாண் சாதி வஞ்சி.’
’’ 165
‘வேறுமறை யோர்ஆதி நாற்சாதி வெள்ளைமுதல்
கூறுநிலை முல்லை குறிஞ்சியே - மாறா
மருதநிலம் நெய்தல்நிறம் வான்மையே செம்மை
கருதரிய பொன்மையே கார்.’
- வெண். பாட். பொ. 1
‘வேதியன் வேந்தன் வணிகன் வேளாளன் எனமுறையே
ஓதுவார் வெண்பா அகவல் கலிவஞ்சி ஓதவற்றின்
பேதமும் அவ்வகை யானே வரும்என்பர்.’
- நவ. 80
‘வெண்பா முதல்நாற் பாவும்அவ் வவற்றோடு
ஒத்து நடைபெறும் ஒருமூன்று இனமும்
மறையவர் முதல்நால் மரபின்வந் தோர்க்கு
ஆம்மரபு என்ப அறிந்திசி னோரே.’
- பி. ம. 46
117
திணை உரிமை
878. முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்
வெள்ளை முதற்பா வினுக்குரி யனவே.
இது நான்கு பாவிற்கும் திணை உரிமை கூறுகின்றது.
இ - ள்: முல்லைத்திணைக்கு வெண்பாவும் குறிஞ்சித் திணைக்கு
ஆசிரியப்பாவும் மருதத்திணைக்குக்
கலிப்பாவும் நெய்தல்திணைக்கு
வஞ்சிப்பாவும் உரியவாம் என்றவாறு.
|