264

264

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

குறிஞ்சித்திணை முற்கூறப்பெறாத முறையல கூற்றானே, பாலைத்திணைக்கு
மருட்பா உரித்தாதல் கொள்க.         

  (118)

 

    [குறிப்பு : ஒத்த நூற்பாக்கள் ‘பூவும் சாந்தும்’ பாட். 124 என்ற நூற்பா
இறுதியில் கூறப்படும். ஏனைய பாட்டியல்களில் ‘முல்லை குறிஞ்சி’ பாட். 118
முதல் ‘பூவும் சாந்தும்’ பாட். 124 என்ற நூற்பா காறும் கூறப்பட்ட செய்திகள்
பாக்களை அடிஒற்றித் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.]        

118

 

நிற உரிமை

 

879. வெண்மை செம்மை கருமை பொன்மை

    உண்மை நிறம்பா ஒருநான் கினுக்கே.

 

இது நான்கு பாவிற்கும் நிற உரிமை கூறுகின்றது.

 

     இ - ள்: வெண்பா முதலிய நான்கு பாவிற்கும் முறையானே
வெண்மையும் செம்மையும் கருமையும் பொன்மையும் உரியவாம்
என்றவாறு.                                           

 (119)

 

வெண்பாவிற்கு நாள் உரிமை

 

880. கார்த்திகை முதலாக் கட்செவி காறும்

    சீர்த்தகு வெண்பாச் சிறந்த நாளே.

 

இது நான்கு பாவிற்கும் நாள் உரிமை கூறுவனவற்றுள் வெண்பாவுக்கு
உரியநாள் இவை என்கின்றது.

 

     இ - ள்: கார்த்திகை முதலாக ஆயில்யம் ஈறாக ஏழு நாளும்
சிறப்புடைய வெண்பாவுக்குச் சிறந்தனவாம் என்றவாறு.    

(120)