பாட்டியல் - நூற்பா எண் 120,121

  265


 

விளக்கம்

 

     குறிப்பு : கார்த்திகை, உரோகணி, மிருக சீரிடம், திருவாதிரை,
புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற ஏழும் வெண்பாவிற்கு உரிய
நாள்களாம்.                                           
 

120

 

ஏனைய பாக்களுக்கு நாள் உரிமை

 

881. மகம்முதல் விசாகம் வரைஅக வற்கும்

    பனைமுதல் புள்வரை பகர்ந்திடு கலிக்கும்

    சதையம் முதற்சோறு அளவும்வஞ் சிக்கும்

    உரிய என்ப உணர்ந்திசி னோரே.

 

இஃது ஏனைய மூன்று பாவிற்கும் நாள் உரிமை கூறுகின்றது.
 

     இ - ள்: மகம் முதல் விசாகம் வரை ஏழு நாளும் அரசர்பாவுக்கும்
அநுடம் முதல் அவிட்டம்காறும் ஏழு நாளும் கலிப்பாவுக்கும் சதயம் முதல்
பரணி வரை ஆறு நாளும் வஞ்சிப்பாவுக்கும் உரிய நாளாம்
என்றவாறு.           

 (121

விளக்கம்

 

     மகம், பூரம், உத்திரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம் என்ற
ஏழும் ஆசிரியப்பாவிற்கு உரிய நாள்களாம்.
 

     அநுடம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்,
அவிட்டம் என்ற ஏழும் கலிப்பாவிற்கு உரிய நாள்களாம்.

 

     சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, பரணி என்ற
ஆறும் வஞ்சிப்பாவிற்கு உரிய நாள்களாம்.                  

 121