266
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
இராசி உரிமை
882. கற்கட கம்தேள் மீனம் மூன்றும்
முற்படு பாவி னிற்படும் இராசி;
மேடமும் சிங்கமும் வேணுவும் அகவற்
பாடுறும்; மிதுனமும் துலையும் கும்பமும்
கலிக்குரித் தாகும்; இடபமும் கன்னியும்
ஒலிப்படு மகரமும் வஞ்சிக்கு உரிய.
இது நான்கு பாவுக்கும் இராசி உரிமை கூறுகின்றது. பொருள் வெளிப்படை.
நாளும் இராசியும் கூறிய முறையால் பாட்டுடைத் தலைவன்
பெயர்க்குப்
பொருத்தம் உடையன கொண்டு பாடுக என்பது
பயன்.
(122)
விளக்கம்
வெண்பாவின் இராசி
|
-
|
கடகம்,
விருச்சிகம், மீனம்
நண்டு
தேள் மீனம் |
ஆசிரியப்பாவின் இராசி
|
- |
மேடம்,
சிங்கம், வேணு
ஆடு
அரி
வில் |
கலிப்பாவின் இராசி
|
- |
மிதுனம், துலாம்,
கும்பம்
இணை தராசு
குடம் |
வஞ்சிப்பாவின் இராசி
|
- |
இடபம், கன்னி,
மகரம்
காளை மணவாப்பெண் முதலை |
பன்னிரண்டு இராசிகளும் முறையே மேடம், இடபம், மிதுனம், கடகம்,
சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆவன
அறிக.
122
|