பாட்டியல் - நூற்பா எண் 120,121 |
267 |
கோள் உரிமை
883. திங்கள் வியாழம் செங்கதிர் செவ்வாய்
புந்திகன் மந்தன் புகர்பெறும் பாந்தள்
வெள்ளை முதல்நான் கினுக்கும் இரண்டிரண்டு
எள்ளா வகையான் கொள்ளும் கோளே.
இது நான்கு பாவிற்கும் கோள் உரிமை கூறுகின்றது.
இ - ள்: சந்திரனும் பிரகஸ்பதியும் வெண்பாவிற்கு உரியோர்;
ஆதித்தனும் செவ்வாயும் ஆசிரியப்பாவிற்கு உரியோர்; புதனும் சனியும்
கலிப்பாவிற்கு உரியோர்;
சுக்கிரனும் பாம்பும் வஞ்சிப்பாவுக்கு உரியோர்
என்றவாறு.
இதுவும் உரிமை அறிந்து கூறுக என்பது பயன்.
(123)
விளக்கம்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி இராகு
கேது
என்ற ஒன்பான் கோள்களுள் நிழற்கோள்களாகிய இராகு கேது
இரண்டனையும் பாந்தள் என அடக்கி
எட்டாக்கி நான்கு பாக்களுக்கும்
இவ்விரண்டாகப் பகுத்தவாறு.
வியாழம் - குரு; புந்திகன் - புதன்; மந்தன் - சனி; புகர் -
வெள்ளி;
பாந்தள் - இராகு, கேது.
123
பூ முதலியவற்றின் நிற உரிமை
884. பூவும் சாந்தும் கலையும் அணியும்
பாஉறு நிறமெனப் பாத்தனர் கொளலே.
இது நான்குபாவிற்கும் உரிய கோள்களின் பூவும் சாந்தும் கலையும்
கலனும்
இப்பண்பின என்கின்றது.
|