பாட்டியல் - நூற்பா எண் 120,121 |
269 |
‘எஞ்சிய வேளாண் சாதி வஞ்சி;
நாளே அவிட்டம் முதல்ஏழ் நாளாம்;
இடபம் கன்னி மகரம் ஓரை;
சார்ந்த விரையே தண்ணறுங் கலவை;
ஏந்திய போதே இன்னறு நீலம்;
நீல நிறனே; நெடுநிலம் மருதம்.’
- பன். பாட். 165
‘நால்வகைப் பாவிற்கும் மேலோர் வகுத்த
இனங்களும் பெறும்என நினைந்தனர் கொளலே.’
’’ 166
‘நால்வகைப் பாவும் நால்வகைக் குலத்தின்
பால்வகைப் படுமே; முதலன இரண்டின்
புணர்ச்சி மருட்பாப் பொருந்தா வருணம்.’
’’ 167
‘நாளும் ஓரையும் நலத்தகு நிலனும்
விரையும் சாதியும் நிறனும் குணனும்
உரைபெறும் பாலார்க்கு உடைய என்ப.’
’’ 168
‘அந்தச் சாதிக்கு அந்தப் பாவே
தந்தனர் புலவர் தவிர்ந்தன வரையார்.’
’’ 169
‘வெள்ளையும் அகவலும் விருத்தமும் கலியும்
வஞ்சியும் எஞ்சா மங்கலம் பொருந்தும்.’
’’ 170
‘வெள்ளை அகவல் விருத்தம் கலியே
வஞ்சி என்றிவை மங்கலப் பாவே.’
’‘ 171
‘வேறுமறை யோராதி நாற்சாதி வெள்ளைமுதல்
கூறுநிலை முல்லை குறிஞ்சியே - மாறா
மருதநிலம் நெய்தல்; நிறம் வான்மையே செம்மை
கருதரிய பொன்மையே கார்.’
- வெண். பாட். பொ. 1
‘கார்த்திகை மாசிபனை குன்றாதி காட்டுகநாள்
மூத்த இராசிநான் மூன்றினையும் - நீர்த்தசீர்
மேதினிமேல் ஆசிரியம் வஞ்சிகலி வெள்ளைஎன
ஓதிய மே டாதியில் ஓட்டு.’
’’ 2
|