274                                  இலக
274

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

      ‘ஆதி முதல்வன் ஓதி வகுத்த

      அறுவகை மரபின் ஆனந் தம்மே

      எழுவகைப் பட்டசொல் வழுவும் ஒரீஇ

      இயம்பா ஏழும் யாப்பினும் இழுக்காது

      பாடுக என்று கூறினர் புலவர்’                      

     

என்பது வருணர் பாட்டியல் ஆகலின்.                                       

(126)

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘வழக்குள் மரபியலுள் நேர்ந்து வழுவாது

     இழுக்கி வடவெழுத்தை இன்பம் - வழுக்காது

     முன்னையோர் பாட்டில் பயின்ற மொழிஅன்றே

     சொன்ன உறுப்பின் துணிபு.’                          

- வெண். பாட். பொ. 5

 

     ‘துணிதற் கரிது பொருளென்றும் சோர்வு

     பணிவுற்ற சொல்மேல் பகுத்தும் - அணிபொருட்டால்

     மற்றும்உண் டென்றும் உரைப்போர் வழுச்சொல்லின்

     இற்றன்றோ பாவின் இழுக்கு.’                         

- வெண். பாட். பொ. 6

 

     ‘தெற்றி வழக்கொடு தேர்ந்துணர் வார்க்கின்பம் செய்யலின்றிப்

     பற்றி வடநூல் எழுத்துக் களோடு பயின்றுரையின்

     மற்றிவை இல்லென்று வாங்கவும் பட்டுப் பொருள் மருண்டு இப்

     பெற்றி உடைச்சொல் பழித்த உறுப்பென்று பேசுவரே.’            

 

- வீ. சோ. 145

                      

     ‘தெற்ற வழக்கொடு தொன்றுணர்வார்க்கு இன்பம் செய்தலின்றிப்

     பற்றல் வடநூல் எழுத்துக்களைப் பழையோர்உரையின்

     மற்றுஇவை இல்லைஎன்று ஓதல் உடன்படல் மாஇயலால்

     பெற்றி உடைச்சொல் பழிச்சும் உறுப்புஎன்று பேசுவரே.’

                                            - நவ. 82

                                                  126

 

ஆனந்தக் குற்றம்

 

887. உறுபுகழ் ஆக்கிய உரவோர் கூறிய

    அறுவகை யான்உறும் ஆனந் தம்தாம்

    இயல்நெறி திரிந்த எழுத்தா னந்தமும்