276 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘புகழ்ச்சிப் பொருளை ஊறுபடக் கிளப்பினும்,
இறைச்சிக்
கிளவியின் பொருந்தா தாயினும்,
உவமக் காட்சியின்
ஊனம் தோன்றினும்
இவையல பிறவும், இன்னவை பின்வரின்
அவமொழி ஆக்கும் பொருளா னந்தம்.’
‘முதல்தொடை மயங்கின மொழிஅரில் தபத்திருப்
பெயரிடைப் படுத்த வழிஇரு பாட்டினுள்
வாய்ப்ப நோக்கி, வல்லோர் கூறியது
யாப்பா னந்தம்என்று இயம்பல் வேண்டும்.’
‘பாவகை ஒருவனைப் பாடுங் காலைத்
தொடைவகை இடையின் வந்தபெயர் தோற்றி
ஏங்கினும் எழுத்துப் பிரிந்தி சைப்பினும்
தூங்கினும் சுழலினும் தூக்கா னந்தம்.’
‘அளபெடை மருங்கின் பாடுவோன் பெயரொடு
பிறப்பின் வழாஅத் தொடைவரத் தொடுப்பின்
தொடையா னந்தம்எனத் துணிதல் வேண்டும்.’
என
ஆசிரியர் அகத்தியனார் ஆனந்த ஓத்துள் கூறுதலான்
அறிக.
எழுத்தானந்தத்திற்குச் செய்யுள்:
‘ஆழி இழைப்பப் பகல்போம்; இரவெல்லாம்
தோழி துணையாத் துயர்தீரும்; - தோழி
நறுமாலை தாராய்! திரையவோஒ என்னும்;
செறுமாலை சென்றடையும்
போழ்து.’
இதனுள்
திரையவோஒ என்னும் இயற்பெயர் மருங்கின் எழுத்து
அளபெழுந்து எழுத்தானந்தம் ஆயிற்று.
சொல்லானந்தத்திற்குச் செய்யுள்:
‘என்னிற் பொலிந்தது இவள்முகம் என்றெண்ணித்
தன்னின் குறைபடுவான் தண்மதியம் - மின்னி
விரிந்திலங்கும் வெண்குடைக்கீழ்ச் செங்கோல்
விசயன்
எரிந்திலங்கும் வேல்கொண் டெழும்.’
|