பாட்டியல் - நூற்பா எண் 127  

  277


 

இதனுள் ‘விசயன் எரிந்து’ என இயற்பெயர் மருங்கின் அமங்கலமான
தொழிற்சொல் வந்து சொல்லானந்தமாயிற்று.

 

     பொருளானந்தத்திற்குச் செய்யுள்:

 

     ‘முரணில் பொதிய முதற்புத்தேள் வாழி;

     பரண கபிலரும் வாழி; - அரணிலா

     வானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன்

     தானந்தம் சேர்கசுவா கா.’

 

இதனுள் புகழ்ச்சிப் பொருளை ஊறுபடக் கூறப் பொருளானந்தமாயிற்று.
ஏனையவும் வந்துழிக் காண்க.’                                            

(127)

 

விளக்கம்

 

     ஆனந்தம் - குற்றம்; இந்நூற்பாவில் அறுவகைக் குற்றங்கள்
இயற்பெயர்க்கண் விலக்கப்படல் வேண்டும் என்பது குறிப்பிடப் படுகிறது;
125ஆம் நூற்பாவில் கூறப்பட்ட இயற்பெயர் அதிகாரத்தான்
வருவிக்கப்பட்டது. இந்நூற்பாவும் உரைக்கண் காணப்படும் நூற்பாவும்
எடுத்துக்காட்டுக்களுள் முதலன இரண்டும் யாப்பருங்கலம் இறுதி நூற்பா
உரையுள் உள்ளன. பாடபேதம் உண்டு.

 

     மேற்கோள் நூற்பாக்களை ஆசிரியர் அகத்தியனார் ஆனந்த ஓத்துள்
கூறியுள்ளார் என்பது இவர்கருத்து.
 

     ‘ஆழி இழைப்ப’ - கூடற்சுழி இழைத்தலான் பகற்பொழுதையும், தோழி
உசாத்துணையாகி அசாத்தணித்தலான் இராப்பொழுதையும் கழிக்கும் ஆற்றல்
உடையதலைவி மாலைப் பொழுது ஒன்றனையும் ஆற்றுதல் இயலாதவளாகித்
தன் கணவனாகிய திரையனை விளித்து நறுமாலை தருமாறு வேண்டுகின்றாள்
என்பது.
 

     திரைய என்று அழைக்கவேண்டிய இடத்துத் திரையவோஒ என்று
அளபெடுக்க அழைப்பது - இயற்பெயர் அளபு எடுத்தலாகிய எழுத்துக்
குற்றமாகும் என்பது.