பாட்டியல்
- நூற்பா எண் 128 |
287 |
அவை அடக்கியல்
888. அவையடக் கியலே அரில்தபத் தெரியின்
வல்லோன் கூறினும் வகுத்தனர் கொண்மின்என்று
எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே.
இது செய்யுள் செய்யும் புலவர்க்கு வேண்டுவதாயதோர் ஒழிபு அவையடக்கம்
கூறுகின்றது.
இ - ள்: அவையடக்கம் கூறும் இலக்கணத்தைக் குற்றமற ஆராய்ந்து
கூறின் கற்றுவல்லோன் நாற்பொருளையும் அறிந்து கூறுமாயினும்
அவையினுள்ளார்க்குத் தான் குறைபாடுடையனாக
நீயிர் குற்றம் களைந்து
ஆக்கிக்கொள்வீர் என்று வழிபடு சொல்லால் கூறுதலாம் என்றவாறு.
வரலாறு:
‘கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாதுவிட்டால்
நற்பா லழியும் நகைவெண்மதி போல்நிறைந்த
சொற்பால் உமிழ்ந்த மறுவும்மதி யாற்கழுவிப்
பொற்பா இழைத்துக் கொளற்பாலர் புலமைமிக்கார்.’
-
சிந்தா 4
எனவும்,
‘சுருக்கமில் கேள்வித் துகடீர் புலவர்முன் யான்மொழிந்த
பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமையப்
பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும்
பொன்னிறமாய்
இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோஇவ் விருநிலமே.’
-
யா. கா. 3
எனவும் கூறியவாற்றான் உணர்க.
இச்சூத்திரம் சீயநோக்காய் நின்றது.
|