பாட்டியல் - நூற்பா எண் 129  

 289


 

      இ - ள்: பாயிரமாவது எல்லா நூல்முகத்தும் உரைக்கப்படும்
 பொதுப்பாயிரம் தன் நூற்கு இன்றியமையாச் சிறப்புப்பாயிரமும் என
 இரண்டு பகுதியினை உடைத்து என்றவாறு.

 

     இதன்விதி எழுத்தோத்தினுள் கூறியவாற்றான் உணர்க.

(129)

 

ஒத்த நூற்பாக்கள்
 

 

     ‘பெயரார்நூ லீவோ னியல்பீயும் பெற்றி

     அயராது கொள்வோ னளவும் - அயர்வின்றிக்

     கோடல்மர பீரிரண்டும் கூறல்பொதுப் பாயிரமாம்

     பாடல்சால் நூலின் பயன்.’                           

- வெண். பாட். பொ. 22

 

     ‘பயனான்காய் மூவகைத்தாய் பன்மூன் றுரைத்தாய்

     இயலுடைத்தாய் மூவாம லேழு - செயல்மதத்தாய்ப்

     பத்தாய்க் குணம்குற்றம் பத்தொழிந் தெண்ணான்காம்

     உத்தியது நூலென் றுரை.’                           

 - வெண். பாட். பொ. 23

 

     உரைத்தநதி சீயமோ டொண்பருந்து தேரை

     நிரைத்ததொழிற் சூத்திரத்தின் நின்று - விரைக்குழலாய்

     செம்பொருள் ஞாபகமாஞ் செய்தி நியதியாம்

     கம்பமிலா நூலின் கருத்து.’                          

 - வெண். பாட். பொ. 24

 

     ‘கருத்தெச்சம் நுட்பம் பொழிப்பகலம் காட்டி

     உரைத்த உதாரணமும் உண்டேல் - விருத்தியாம்;

     பூண்ட கருத்தும் பொழிப்பு முதாரணமும்

     காண்டிகையென் றோதல் கடன்.’                     

- வெண். பாட். பொ. 25

 

     ‘கண்ணாய தெய்வம் இறைஞ்சிக் கருதுநூல்

     பண்ண அதிகாரம் பாரித்தல் - எண்ணும்

     மதியோர் சிறப்பென்பர் வானவரை வாழ்த்தா

     அதிகார முஞ்சிறப்பென் றாக்கு.’                     

- வெண். பாட். பொ. 19