292 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
உரை.
(1 சூ). நூல் நுதலி வரும் தொகை, வகை, உரைக் கூறுபாடு,
குற்றம்,
குற்றமின்மை, உத்திவகை, சூத்திரம், ஓத்து,
படலம், பிண்டம் என்பன
அடுத்து விளக்கப்பெறும். நன்னூலார் நூல் இலக்கணத்தைப்
பொதுப்பாயிரத்தில்
கூறியிருப்பினும் தொல்காப்பியத்தில்
நூல் இலக்கணம்
அந்நூல் இறுதி இயலாகிய மரபியலிலே கூறப்பட்டது
போன்று, இந்நூலுள்ளும் இறுதி இயலாகிய பாட்டியலில்
நூல் இலக்கணம்
கூறப்பட்டுள்ளது; நூல் இலக்கணம் பிண்டத்து
ஒழிபுள் ஒன்றாகலான்.
ஒத்த
நூற்பாக்கள்
‘நூலெனப் படுவது ....... பொருந்தி.’
- தொல். பொ. 478
‘ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின்
முப்பத் திருவகை உத்தியொடு புணரின்
நூலென மொழிப நுணங்கு மொழிப்புலவர்.’
- தொ. பொ. 653
‘அதுவே,
ஒருபொருள்
............... புலவர்.’
- தொ. பொ. 480
‘நூலின் இயல்பே நுவலின் ஓரிரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நாற்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
ஐயிரு குற்றமும் அகற்றிஅம் மாட்சியோடு
எண்ணான்கு உத்தியின் ஓத்துப் படலம்
என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்பநடை பெறுமே.’
- நன். 4
‘முதல்வழி சார்பென மூவகைத் தந்திரம் சூத்திரமும்
உதவுவிருத்தி, உயர்தருமம் முதல் நான்கு, ஏழ்வரை,
மதவிகற்பம், பத்துக்குற்றத்துத்
தீர்ந்து, பத்துக்குணத்தின்
நுதலும் பன்மூ(ன்)றுடன் முப்பத்திரண்டு உள;நூல் நெறியே.’
- நவ. 70
|