பாட்டியல்
- நூற்பா எண் 130,131 |
293
|
‘அவற்றுள்,
உத்தம நூல்மரபு உணர்த்துங் காலை
முத்திறத்து ஒன்றாய்ப் பாயிரம் முதலுபு
நாற்பொருள் நலனுற நவில்வன வாகிச்
சூத்திரம் ஓத்துப் படலமென்று உரைபெறும்
உறுப்புடைப் பிண்டத் தொடும்அமைந்து அஃகாக்
காண்டிகை விருத்தியில் காட்சிதந்து ஈரைங்
குற்றமொன் றின்றிக் குழகொடும் எண்ணான்கு
உத்தியில் சிறந்ததுஎன்று உரைத்தனர் புலவர்.’
- மாறன். 6
130
நூற்பா இலக்கணம்
891. அவற்றுள்,
சூத்திரம் தானே,
யாடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே.
இது சூத்திரத்தின் இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: ஒரு பொருள் நுதலிய சூத்திரமாவது, கண்ணாடி சிறிதாயினும்
பெரிய பொருள் முழுதினையும்
தோற்றுவித்தல் போலச் சில்வகை
எழுத்தாயினும் தன்கண் அகன்ற பொருள் சொல்லான் விளங்கத்
தோன்றி,
உய்த்துணர்ச்சி இன்றித் தொடர்மொழிப் பொருள்பட தொகைவகைவிரி
என்னும் இலக்கணத்துள்
ஒன்று பயப்பத் தொடர்ச்சி கொண்டு
செய்யப்படுவது என்றவாறு.
(131)
விளக்கம்
‘சில்வகை எழுத்தின் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியின் செறித்துஇனிது விளக்கித்
திட்பம் நுட்பம் சிறந்த சூத்திரம்.’
- நன். 17
|