பாட்டியல்
- நூற்பா எண் 131,132 |
295 |
ஒத்த நூற்பாக்கள்
‘சூத்திரம் தானே ....................... யாத்தமைப் பதுவே.’
- தொ. பொ. 484
‘சில்வகை.......................சூத்திரம்.’
- நன். 17
‘நூலின் ஒருபொருள் நுதலியது ஒன்றாய்ச்
சில்வகை எழுத்தினில் செறித்திடும் யாப்பாய்ப்
பலதிறப் பயன்தெரிவு உடையதோர் பண்பாய்ப்
படிமக் கலத்துள் படுநிழல் பொருவ
ஒண்மையும் நுண்மையும் உறுவது சூத்திரம்.’
- மாறன். 15
131
நூற்பாவின் கிடக்கை முறை
892. யாற்றது ஒழுக்கே தேரைப் பாய்வே
சீய நோக்கே பருந்தின் வீழ்வுஎன்று
ஆவகை நான்கே கிடக்கை முறையே.
இது மேற்கூறிய சூத்திரத்தின் கிடக்கைமுறை கூறுகின்றது.
இ - ள்: நிறுத்த முறையே கூறுதலும், இடை விட்டுக் கூறுதலும்,
முன்னும் பின்னும் பொருள் எய்தக்
கூறுதலும், நடுக்கொண்டு கூறுதலும், என
நான்கு கூற்றே சூத்திரத்தின் கிடக்கை முறைமை என்றவாறு.
(132)
விளக்கம்
ஆற்று நீர்ப்போக்கு ஒருவழியே தொடர்ந்து செல்வதுபோலப் பல
நூற்பாக்கள் பொருள் தொடர்புறத்
தொடர்ந்து அமைவது ஆற்றொழுக்கு
நிலை; தவளை ஊர்ந்து செல்லாது சிறிது இடைவெளி நடுப்படத் தத்திச்
செல்வதுபோல, ஒரு நூற்பா
|