பாட்டியல் - நூற்பா எண் 132,133

      297


 

     ‘மாட்டுறுப்பு அரிமா நோக்கம் தவளைப்

     பாய்த்தாற் றொழுக்கொடு பருந்தின் வீழ்வொடு

     நிரனிறை விளக்கெனும் பொருள்கோள் நிலைத்தே.’

                                             - மாறன். 16

                                                     132

 

நூற்பாவின் அழகு

 

893. உரைஎடுத்து அதன்முன் யாப்பினும் சூத்திரம்

    புரைதப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்

    விளம்பலும் விலக்கலும் உடையோர் வகையொடு

    புரைதப நாடிப் புணர்க்கவும் பட்டுச்

    சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச்

    சொல்லுங் காலை உரைஅகத்து அடக்கி

    நுண்மையொடு புணர்ந்த வண்மைத் தாகித்

    துளக்கல் ஆகாத் துணைமை எய்தி

    அளக்கல் ஆகா அரும்பொருட்டு ஆதல்

    சூத்திரத்து அழகென யாத்தனர் புலவர்.

 

இது மேற்கூறிய சூத்திரத்திற்கு ஒரு சிறப்புக் கூறுகின்றது.

 

     இ - ள்: சூத்திரத்திற்கு முன் உளவாகிச் சுவைபட நின்ற கட்டுரையைச்
சூத்திரமாகக் கொண்டு செய்தலும், காண்டிகையுரையைக் குற்றமற்ற
சூத்திரமாகச் செய்தலும், கருத்துப் பொருளாய்க் கிடந்ததனை
எடுத்துக்கூறலும், எய்தியதனை விலக்கிக் கூறுதலும், நால்வகை உரையான்
ஓருந்திறத்துடனே குற்றமற நாடிப் புணர்க்கப்படுதலும், சில்வகைப்பட்ட
எழுத்துக்களால் சுருங்கச் செய்தல் உடைத்தாகி, ஆசிரியன் முதலியோர்
கூற்றுவகையான் உரைக்குமிடத்து, முறை பிறழாமல் அடக்கிச் சொல்லுதல்
உற்று,