பாட்டியல் - நூற்பா எண் 133

      299


 

செய்யுட்டு என்பது செய்யப்படுதலை உடைத்து என்று பொருள்படுகிறது.

 

     தொல்காப்பியப் பொருட்படலத்து 654, 655 ஆம் நூற்பாக்களை
இணைத்து இந்நூற்பா அமைக்கப்பட்டுள்ளது.

 

     ‘சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்து உரைக்கும் இடத்தும்,
சூத்திரப் பொருள் விளங்கக் காண்டிகை புணர்க்குமிடத்தும், ஆசிரியன்
இப்பொருள் இவ்வாறு கூறல் வேண்டும் என விதித்தலும், இப்பொருள்
இவ்வாறு கூறப்பெறான் என விலக்கலுமாகிய இருவகையோடு கூடப்
பொருந்தின அவை ஆராய்ந்து புணர்க்கவும் ஆம். என உரைப்பகுதிக்கு
உரை ஆசிரியர் உரை வரைந்துள்ளார்.
 

     காண்டிகையினை விளக்கும் கருத்தினானும் அக்கருத்து இன்றியும்
அச்சூத்திரத்திற்கு உரை தொடர்ந்து எழுதினும், அச் சூத்திரத்திற்கு இடை
இன்றிக் காண்டிகை பொருந்தச் செய்யினும் காண்டிகை இல்லாத
முகவுரைக்கண்ணே முன்னும் பின்னும் காண்டிகை பெய்து உரைத்தலும்,
கடாவிற்கு விடை கூறுவாரும் போலி மறுப்பாரும் சொல்லும்
சொற்பகுதியோடு, ஐயுற்று வினாவியதனை விடுத்தலும் உண்மை அல்லாப்
போலியினை விலக்குதலும் செய்து, காண்டிகை இரண்டும் உரையிரண்டும்
என்று வருகின்ற நான்கன்கண்ணும் இடை அந்தரமின்றிப் புணர்க்கப்படும்

அவ்விரு பகுதியும் என்பது  பேராசிரியர் உரை பற்றிய இந்நூற்பாவின்
முதல் நான்கு அடிகளுக்கும் தரும் விளக்கமாகும். நூற்பா உரையினைப்
பேராசிரியர் காண்டிகை, விரிவான காண்டிகை, உரை, விரிவான உரை என
நான்காகக் கொண்டு அவற்றிற்கு முறையே,
 

     ‘பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின்

     கரப்பின்றி முடிவது காண்டிகை ஆகும்.’  - தொ. பொ. 656

 

     ‘விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச்

     சுட்டிய சூத்திரம் முடித்தல் பொருட்டா