300
300

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     ஏது நடையினும் எடுத்துக் காட்டினும்

     மேவாங் கமைந்த மெய்ந்நெறித்து அதுவே.’

-  தொ. பொ. 657

 

‘சூத்திரத்து உட்பொருள் அன்றியும் யாப்புற

இன்றி யமையாது இயைபவை எல்லாம்

ஒன்ற உரைப்பது உரைஎனப் படுமே.’      

 ’’    658

 

‘மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்

தன்னூ லானும் முடிந்தநூ லானும்

ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித்

தெற்றென ஒருபொருள் ஒப்புமை கொளீஇத்

துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்.’     

 ’’    659

 

என்ற நூற்பாக்களைக் கொண்டுள்ளார்.

 

     நன்னூலார் காண்டிகை, விருத்தி என்ற இரண்டு வகையே கொண்டு,

 

     ‘கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்

     அவற்றொடு வினாவிடை ஆக்க லானும்

     சூத்திரத்து உட்பொருள் தோற்றுவ காண்டிகை.’  

- நன். 21

 

     ‘சூத்திரத்து உட்பொருள் அன்றியும் ஆண்டைக்கு

     இன்றி அமையா யாவையும் விளங்கத்

     தன்னுரை யானும் பிறநூ லானும்

     ஐயம் அகலஐங் காண்டிகை உறுப்பொடு

     மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி.’            

 ’’    22

 

என்று நூற்பாக்கள் யாத்துள்ளார்.

 

     மாறன் அலங்கார ஆசிரியர்,

 

     ‘உற்றது பதப்பொருள் உதாரணம் மூன்றுடன்

     கற்றவர் வினாவிடை காட்டுதல் காண்டிகை.’    

 - மாறன் 21