பாட்டியல்
- நூற்பா எண் 133,134 |
301 |
‘ஒன்றிய சூத்திரத் துட்பொருள் அன்றியும்
இன்றி யமையா தனபுணர்ந் திசைத்தஐந்து
உறுப்புடன் இருதிறத்து உரையிட னாகமெய்ந்
நிறுத்தியது ஒன்றென நிகழ்த்துதல் விருத்தி.’
’’ 22
எனக் காண்டிகை விருத்தி இவற்றின் இலக்கணம் கூறியுள்ளார்.
சூத்திரத்தழகாகத் தொல்காப்பியனார் ஒருவரே கூறியுள்ளார்.
அதனையே இவ்வாசிரியர் தாமும்
எடுத்து மொழிந்துள்ளார்.
ஒத்த நூற்பாக்கள்
முற்றும் - தொ. பொ. 654, 655.
133
ஓத்து இலக்கணம்
894. நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓர்இனப் பொருளை ஒருவழி வைப்பது
ஓத்துஎன மொழிப, உயர்மொழிப் புலவர்.
இஃது இயலின் இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: இனமொழி கிளந்த ஓத்தாவது சிதர்ந்து கிடப்பனவற்றைப் பல
ஓத்தாகச் செய்யாது
ஒத்த மணிகளை ஒரு கோவையுறச் செய்தாற்போல
ஓரினப் பொருளை எல்லாம் ஓரிடத்தே தொகுத்துக்
கூறுவது ஓத்தாம்
என்றவாறு.
நேரினமணி எனவே ஒரு சாதி ஆயினும் தம்மில் ஒத்தன
என்பதாம்.
(134)
ஒத்த நூற்பாக்கள்
தொ. பொ. 482 பே.
முழுதும் - நன். 15
(ஓத்து எனினும் இயல் எனினும் ஒக்கும்.)
|