302 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘ஓத்து எனப்படுவது ஓர்இனப் பொருளைக்
கோத்துஒரு நெறிபடக் கூறுவ தாகும்.’
- மாறன் 17
134
படல இலக்கணம்
895. ஒருநெறி இன்றி விரவிய பொருளால்
பொதுமொழி தொடரின் அதுபடல மாகும்.
இது படலத்தின் இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: ஒரு நெறியன அன்றிப் பல்வேறு வகையவாம்
எழுத்திலக்கணத்தினையும் சொல்லிலக்கணத்தினையும்
பொருள்
இலக்கணத்தினையும் பொருள் என்பதொரு முறைமைபற்றி இயைபு நோக்கிப்
பொதுவகையான் தொகுத்துக்
கூறுவது படலமாம் என்றவாறு.
படலம் எனினும் அதிகாரம் எனினும் ஒக்கும்.
(135)
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தொல். பொ. 483. பே.
‘ஒருநெறி...................தொடர்வது படலமாகும்.’
- நன். 16
‘படலம் என்பது பன்னெறிப் பொருளால்
புடைபட விரவிய பொதுமொழித் தொடர்பே.’
- மாறன். 18
[வீரசோழியம், பிரயோக விவேகம் முதலியவற்றில் படலம் என்பது
இயல் என்னும் பொருளில்
வந்துள்ளமையும் குறித்து
உணரத்தக்கது.]
135
பிண்ட இலக்கணம்
896. மூன்றுஉறுப்பு அடக்கிய தன்மைத் தாயின்
தோன்றுமொழிப் புலவர்அது பிண்டம் என்ப.
இது பிண்டத்தின் இலக்கணம் கூறுகின்றது.
|