பாட்டியல் - நூற்பா எண் 136

      303


 

இ - ள் : சூத்திரமும் ஓத்தும் படலமும் என்னும் மூன்று உறுப்பினையும்
அகப்படுத்தி நிற்கும் தன்மை உடைத்தாயின் அதனை உலகில் நின்று
விளங்கும் மொழியைக் கூறும்புலவர் பிண்டம் என்று கூறுவர் என்றவாறு.
 

     உறுப்படக்கிய பிண்டம் எனவே, பிண்டம் என்பது ஒரு முதல்
என்பதாம். அப்பிண்டமும் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும்
முத்தமிழையும் கூறும் அகத்தியத்திற்கு உறுப்பு ஆதலான் பிண்டம் என்பது
முதலாயவாறு என்னை எனின்,

 

     ‘முதல்இவை சினைஇவை எனவேறு உளஇல

     உரைப்போர் குறிப்பின; அற்றே பிண்டமும்.’ 

 - இ. வி. 222

 

என்றதனால் சொல்லுவான் கருத்தொடுபட்டு முதல் என்றார்.

 

     எனவே, படலம் என்பது இரண்டு உறுப்பு அடக்கியது எனவும், இயல்
என்பது ஓர் உறுப்பு அடக்கியது எனவும் ஆயின.     
 

 (136)

விளக்கம்

 

     ஓத்து என்பது நூற்பா என்பதோர் உறுப்பை உடையது. படலம்
 என்பது ஓத்து நூற்பா என்ற ஈருறுப்புடையது.

 

     இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழையும் கூறுவது அகத்தியம்
என்ப. அதனைப் பிண்டங்களை அடக்கிய மகாபிண்டம் என்ப;

 

‘அவை ஒரு மூன்றும் அடக்குவது பிண்டம்.’       

 - மாறன். 19

 

‘மிகத் தெளி வுடைய அகத்தியம் அதுபோல்

முத்தமிழ் உட்கொளும் மூன்றுபிண் டமும்உறுப்பு

ஒத்து ஒருங்கு உட்கொளல் உறின்மகா பிண்டம்.’        

- மாறன். 20

 

என்ப ஆகலின்.