304 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
ஒத்த நூற்பா
முழுதும் - தொல். பொ. 484. பே.
136
பத்துவகைக் குற்றங்கள்
897. ஈரைங் குற்றமும் நேரிதின் நாடின்
கூறியது கூறல்1 மாறுகொளக் கூறல்2
குன்றக் கூறல்3 மிகைபடக் கூறல்4
பொருளில மொழிதல்5 மயங்கக் கூறல்6
கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்7
பழித்த மொழியான் இழுக்கம் கூறல்8
தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்9
என்ன வகையினும் மனங்கோள் இன்மை10
அன்ன பிறவும் அவற்றுவிரி ஆகும்.
இஃது ஈரைங்குற்றமாவன இவை என்கின்றது.
இ - ள்: பத்து வகைக் குற்றத்தினையும் நேர்மையான் ஆராயுமிடத்து
முன்னர்க் கூறிய
பொருளைப் பின்னர்க் கூறுதலும், முன்னர்க் கூறியதற்குப்
பின்னர் மாறுபடக் கூறுதலும், குறைபாடுறக்
கூறுதலும், ஒரு பொருட்கு
இலக்கணம் கூறுமிடத்துப் பொருட்குச் சிறப்பிலக்கணம் தோன்றக் கூறாது
ஏனைப் பொருட்கண்ணும் செல்லும் பொது இலக்கணத்தால் கூறுதலும்,
கூறும் பொருள் பெறாமல் கூறுதலும்,
தெளிவுறாமல் கவர்படுமொழியால்
மயங்கக் கூறுதலும், கேட்டோர்க்கு இன்னாப் பொருளாய்த் தொடர்ச்சி
இன்றிக் கூறுதலும், பழிப்புடைய சொல்லான் இழிபு தோன்றக் கூறுதலும்,
வரலாற்று முறைமையோடு படாது
செய்வோன் தான் ஒரு பொருளைக்
கற்பித்துக் கூறுதலும், எவ்வகையானும் கேட்போர் மனங்கொள்ளாதிருக்கக்
கூறுதலும் இவை போல்வன பிறவுமாம் என்றவாறு.
|