பாட்டியல் - நூற்பா எண் 137 

305


 

     வடநூலார் கூறிய அவ்வியாத்தி அதிவியாத்தி அசம்பவம் என்னும்
தூடணங்களும் இவற்றுள்ளே அடங்குமாறு அறிந்து அடக்கிக்கொள்க.                          

 (137)

                    விளக்கம்

 

     அவ் வியாத்தி     -     குன்றக்கூறல்.

     அதி வியாத்தி     -     மிகைபடக்கூறல்

     அசம்பவம்        -     மாறுகொளக்கூறல்.

 

     இக்குற்றங்கள் பத்தனையும் சிதைவு என்று தொல்காப்பியனார்
குறிப்பிடுவார். இவற்றுள், கூறியது கூறல், மாறுகொளக்கூறல்,
மிகைபடக்கூறல், பொருளிலமொழிதல், மயங்கக்கூறல் என்ற ஐந்தும்
பயன்படும் குற்றம்; இவை நூற்பாக்களில் அருகிக் காணப்படலாம்;
ஆனால் ஏனைய ஐந்து குற்றங்களும் அறவே வருதல் கூடாது
என்பதாம்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘சிதைவுஎனப் படுபவை வசையற நாடின்..............

     அன்னபிறவும் அவற்றுவிரி யாகும்.’                        

 - தொல். பொ. 663

 

     ‘குன்றக் கூறல் மிகைபடக் கூறல்

     கூறியது கூறல் மாறுகொளக் கூறல்

     வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்

     வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்

     சென்றுதேய்ந்து இறுதல் நின்றுபயன் இன்மை

     என்றுஇவை ஈரைங் குற்றம் நூற்கே.’                               

- நன். 11

 

     ‘பொருள்நிலை கூறல் மருள்நிலைத்து ஆதல்

     இன்னாச் சொற்பெறல் வெளிறுபட்டு அழிதல்

     மொழிந்ததை மொழிதல் முரண்சொல் மொழிதல்

     குறைபடக் கூறல் மிகைபட விளம்பல்

     சந்த இன்பம் தழுவுதல் இன்மை

     எதிர்மறுத்து உணர்த்தல் என்றிவை உளப்பட

     கூறினர் ஈரைங் குற்றம் நூற்கே.’                                

 

- மாறன் 23

                                                137

      39-40