306
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
முப்பத்திரண்டு
உத்தி வகைகள்
898.
ஒத்த காட்சியின் உத்திவகை விரிப்பின்
நுதலியது அறிதல்1 அதிகார முறையே2
தொகுத்துக் கூறல்3
வகுத்துமெய் நிறுத்தல்4
மொழிந்த
பொருளோடு ஒன்ற அவ்வயின்
மொழியா ததனை முட்டின்று முடித்தல்5
வாரா ததனால் வந்தது
முடித்தல்6
வந்தது கொண்டு
வாராதது உணர்த்தல்7
முந்து மொழிந்ததன்
தலைதடு மாற்றே8
ஒப்பக் கூறல்9
ஒருதலை மொழியே10
தன்கோள் கூறல்11
முறைபிற ழாமை12
பிறன்உடம் பட்டது
தான்உடம் படுதல்13
இறந்தது காத்தல்14
எதிரது போற்றல்15
மொழிவாம் என்றல்16
கூறிற்று என்றல்17
தான்குறி யிடுதல்18
ஒருதலை அன்மை19
முடிந்தது காட்டல்20
ஆணை கூறல்21
பல்பொருட்கு ஏற்பின்
நல்லது கோடல்22
தொகுத்த
மொழியான் வகுத்தனர் கோடல்23
மறுதலை சிதைத்துத்
தன்துணிபு உரைத்தல்24
பிறன்கோள் கூறல்25
அறியாது உடம்படல்26
பொருளிடையிடுதல்27
எதிர்பொருள் உணர்த்தல்28
சொல்லின் எச்சம்
சொல்லியாங்கு உணர்த்தல்29
தந்துபுணர்ந்து
உரைத்தல்30 ஞாபகங் கூறல்31
உய்த்துக்கொண்டு
உணர்த்தலொடு32
மெய்ப்பட நாடிச்
சொல்லிய அல்ல பிறஅவண் வரினும்
சொல்லிய வகையாற் சுருங்க நாடி
மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு
இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்;
நுனித்தகு புலவர்
கூறிய நூலே.
|