312
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
பொருளுக்குத்
தொடர்புடையது ஒன்றனை ஆண்டே கூறாது,
அவ்விடம் விடுத்துப்
பிறிதோரிடத்தில் கூறுதலும் போல்வன.
28.
எதிர்பொருள் உணர்த்தல்:
முதல்நூல் ஆசிரியன் சொற்றவற்றில் சில
தன்காலத்துத் திரிந்து
வருதலைத் தானே கண்டு
உணரும் ஆசிரியன், தான் கூறுவனவற்றுள்ளும்
சில
பிற்காலத்தில் திரிபுபடுதலும் கூடும் என்பதனை உட்கொண்டு,
அத்திரிபுகளையும் காலம் நோக்கி ஏற்றுக்கொள்ளுதல்
வேண்டும் என்று
தெரிவித்தல்.
29.
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்
:
நேரே
வெளிப்படக்கூறாது, சொல்லாற்றலால் குறிப்பாகப்
பெறப்பட
வேண்டிய பொருளினையும், வெளிப்படையாக எடுத்தோதின்
எத்தகைய தெளிவு புலப்படுமோ அத்தகைய தெளிவு புலப்படும்
வகையில்கொள்ளவைத்தல்.
30.
தந்து புணர்ந்து உரைத்தல்
:
உண்மையாக ஒரு பொருண்மை உடையது அன்றாகிய
ஒன்றனை
ஒருபயன் நோக்கி அப் பொருண்மை உடையதுபோலச்
சுட்டிக்கூறுதல்.
31.
ஞாபகங்கூறல் :
நூற்பா
இயற்றுங்கால் அதன் அழகுகளாகக் கூறப்பட்டவற்றை
உட்கொண்டு
சில்வகை எழுத்தின் செய்யுட்டாகவும் நாடுதல் இன்றிப்
பொருள்நனி விளங்கவும் இயற்றாது, அரிதும் பெரிதுமாக
நலிந்து செய்து,
அதனானே வேறு பல பொருளும் அறிதற்கு
வாய்ப்பு அளித்துக் கூறல்.
32.
உய்த்துக்கொண்டு உணர்தல் :
ஓரிடத்தில் ஒரு பொருள்பற்றி நூற்பா ஒன்று யாத்தவழி
அந்நூற்பாவின்கண் மற்றொரு பொருளையும் அமைத்துக்
கொள்ளுதற்கு
வாய்ப்பு அளித்து நூற்பா யாத்தல்.
|