314
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘உள்ளுறுத் தமைத்த உத்திவகை உரைப்பின்
நுதலிய துணர்த்தல் உரைமுறை வைப்பே
தொகைபெற நாட்டல் வகைபெறக் காட்டல்
விரிந்தவை இவைஎன விழுமிதின் காட்டல்
தொகுத்த மொழியுள் வகுத்தனர் கோடல்
முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே
பல்பொருட்கு ஏற்பின் நல்லவை கோடல்
மொழிந்தனம் என்றல் மொழிவாம் என்றல்
இறந்தது காத்தல் எதிரது போற்றல்
மொழியா ததனை முட்டின்றி முடித்தல்
வந்தது கொண்டு வாராதது முடித்தல்
வாராதது கொண்டு வந்தது முடித்தல்
பிறன்கோள் கூறல் தன்கோள் கூறல்
பிறன்உடம் பட்டது தான்உடம் படுதல்
அறியாது உடம்படல் ஆணை கூறல்
தான்குறி யிடுதல் தந்துகொணர்ந்து உரைத்தல்
மறுதலை சிதைத்துத் தன்துணிபு உரைத்தல்
மாட்டெறிந்து ஒழுகல் இரட்டுற மொழிதல்
ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்
மாட்டுறுப் பினவா மனங்கொளக் கூறல்
உய்த்துக்கொண்டு உணர்தலின் உரனுடை யனவாய்த்
தீபக வகையால் சிறப்புறக் கூறல்
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்என்று
அமைத்ததின் அகப்பட அமையா தனவும்
சுருங்கக் கூறிய தொடர்பினை நாடி
ஒருங்கமைத்து உணர்த்துதல் உரவோர்கடனே.’
- மாறன். 25
138
நூலின்
வகை
899.
முதல் வழி சார்புஎன நூல் மூன்று ஆகும்.
இது,
நூலின் வகை கூறுகின்றது.
|