பாட்டியல் - நூற்பா எண் 139, 140

315


 

     இ - ள்: கூறிய இலக்கணங்களை எய்திய அந்நூல் முதல் நூல்
என்றும், வழி நூல் என்றும், சார்பு நூல் என்றும் மூன்றாய் வழங்கப்படும்
என்றவாறு.
 

     முதல்வழி சார்பு என்பன ஆகுபெயர். கூறிய இலக்கணங்களாவன
சூத்திரமும் ஒத்தும் படலமும் பிண்டமுமாம். அவையிற்றினை அடக்கிய
வேறு பிண்டம் இவைகளின் இலக்கணம் என்றே கோடும்.  
                                   

(139)

 

விளக்கம்

 

     இவைகளின் இலக்கணம் - முதல்வழி சார்பு நூல்களின் இலக்கணம்.

தொல்காப்பியனார் முதல் நூல், வழி நூல் என்ற இரண்டே கொண்டார்.
சார்பு நூல் என்ற ஒன்றனை அமைத்து அதற்கு அப்பெயர் இடுதல் கூடாது
என்று பேராசிரியர் விளக்கமும் தந்துள்ளார். (தொல். பொ. 648 பே)
பின்னுள்ளோர் சார்பு நூலும் கொண்டுள்ளனர்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘மரபு நிலை திரியா மாட்சிய ஆகி

     உரைபடு நூல்தாம் இருவகை இயல

     முதலும் வழியுமென நுதலிய நெறியின.’   

- தொல். பொ. 648

     முழுதும் - நன். 5

 

     ‘முத்திறத்தொன் றென்பன முதல்வழி சார்பே.’                      

- மாறன் 7

                                                       139

 

முதனூல் இலக்கணம்

 

900. அவற்றுள்,

    வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

    முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.

 

இது முதல் நூலின் இலக்கணம் உணர்த்துகின்றது.