316                      இலக
316

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

      இ - ள்: முதல் வழி சார்பு என்ற மூன்றனுள், அநாதியே அவிச்சை
காரணமாக வரும் இருவினைப் பந்திப்பினின்றும் நீங்கி, இறைவனதுஅருளான் தன்னை அறிவதாக அறியும் பரஞானத்தான் உளதாயசீவன் முத்தி பெற்றோனால் செய்யப்படுவது முதனூலாம் என்றவாறு.
 

     என்றது யோக முயற்சியின் தலை நிற்க, மெய்யுணர்வு பிறந்து, யான்
எனது என்னும் செருக்குக்கள் அற்று, இருவினைப் பயனினும் சமம்

செய்கோல் போலப் புடைபெயர்ச்சி இன்றி ஒரு நிலையின் மேல் நோக்கிய
வழி, இறைவன் அருள்வதிய, அதனான் விரிந்த மெய்ஞ்ஞானம்

விளங்குதலாம். முனைவன் போன்று நிற்றலின் முனைவன் என்றார்; அஃது
உபசார வழக்கு. அவர்கள் மக்கள் உயிர்க்கு உறுதி பயப்ப அருளால்
கூறியவாறாம் என்க. இறைவன் அருளால் அறிவு விளங்கும் என்பது
என்னை?
 

     ‘காட்டாதன எல்லாம் காட்டிச் சிவங்காட்டித்

     தாட்டாமரை காட்டித் தன்கருணைத் தேன்காட்டி.’

- திருவாசகம். திருஅம்மானை 6

 

எனத் தென்னவன் பிரமராயரும்,

 

     ‘மயர்வற மதிநலன் அருளினன் எவனவன்’ - திருவாய்மொழி 1

 

எனக் குருகூரரும் பொருள்மொழிக்காஞ்சி கூறியவாற்றான் அறிக.   

     (140)

 

விளக்கம்

 

     உயிர்களுக்கு அநாதி காலம் தொட்டே அவிச்சை என்ற அறியாமை
உண்டு. அவ்வறியாமை காரணமாக நல்வினை தீவினை என்ற இருவினைப்
பிணிப்பும் ஏற்படும். அத்தகைய