318                      இலக
318

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

ஒத்த நூற்பாக்கள்

 

       முழுதும் - தொல். பொ. 649       - நன். 6

 

     ‘முதல்வனின் சிறந்தது முதல் நூலாகும்.’                         

  - மாறன் 8

                                                                       140

வழிநூல் இலக்கணம்

 

901. வழிஎனப் படுவது அதன்வழித் தாகித்

    தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

    அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே.

 

இது வழிநூலின் இலக்கணம் கூறுகின்றது.

 

     இ - ள்: வழிநூல் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, முதல் நூலில் கூறிய
பொருளோடு வேறுபடாமல் பின்தோன்றுவனவாகி, முதனூலில் எழுத்திலக்கணமும்
சொல்லிலக்கணமும் மயங்கக் கூறினாற்போலக் கூறாது, ‘மயங்கா மரபின்
எழுத்துமுறை காட்டி’ - (தொல். சிறப்புப்பாயிரம்). எனவேறோர் அதிகாரமாகத்
தொகுத்துக் கூறுதலும், விரித்த சூத்திரப் பொருளைத் தொகை மரபால் தொகுத்துக்
கூறுதலும்,

    

     ‘வினைநிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்

     பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே’

 

என ஆசிரியர் அகத்தியனார் தொகுத்துக் கூறிய பொருளை,

 

     ‘பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்

     வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்

     பண்புகொள வருதல் பெயர்கொள வருதல்என்று

     அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே’                   

- தொல். சொ. 67

 

என விரித்துக் கூறுதலும்,