பாட்டியல்
- நூற்பா எண் 141 |
319 |
‘எழுத்தெனப் படுப,
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.’
- தொல். 1
எனத்
தொகையும் விரியுமாகக் கூறுதலும், வட சொல்லால் கூறிய
அறநூற்பொருளைத் தமிழ் மொழியால் கூறுதலும்,
மொழி பெயர்த்தல் ஒழித்து ஏனை இலக்கணம் பெற
முதல் நூல்
சூத்திர யாப்போடு சேர்த்துக் கூறுதலும்
ஆகிய அவ்விலக்கணங்களை
உடையனவாம் என்றவாறு.
மொழி பெயர்த்தல் ஆசாரக்கோவையும், அதர்ப்படயாத்தல்
திருவள்ளுவப்பயனும் முதலியன.
(141)
விளக்கம்
மொழி பெயர்க்கப்படுவன, தமிழில் இல்லாதனவாய்த்
தமிழகத்திற்குத்
தேவைப்படும் செய்திகள். அவற்றை
உள்ளவாறே மொழிபெயர்த்தல்
வேண்டுமே ஒழியத் தொகுத்தோ
விரித்தோ தொகை விரியாகவோ மொழி
பெயர்த்தல்
கூடாது என்பது.
ஒத்த
நூற்பாக்கள்
முழுதும்
- தொ. பொ. 650, 651.
‘முன்னோர் நூலின் முடிபுஒருங்கு ஒத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூ லாகும்.’
- நன். 7
‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
எனத்தகு நூல்யாப்பு ஈரிரண்டு என்ப.’
- நன். 49
‘விழுமிய முதல்நூல் விதித்தவற் றினொடும்
பழுதறச் சான்றோர் படைத்தவும் தழீஇ
வழுவின் றாய்வரல் வழிநூ லாகும்.’
- மாறன் 9
|