320
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘தொகுத்தலும் விரித்தலும் தொகைவகை
விரியின்
பகுத்தலும் மொழிபெயர்த் தலும்எனும் பான்மைய.’
- மாறன் 12
141
சார்புநூல்
இலக்கணம்
902.
இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபுவேறு உடையது புடைநூல் ஆகும்.
இது
புடைநூலின் இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: முதல் நூற்கும் வழி நூற்கும் ஒரு மருங்கு ஒப்ப
எடுத்துக்கொண்டு, முடிபு ஒன்றாகக் கூறுமாறு வேறுபாடு
உடையது சார்பு
நூலாம் என்றவாறு.
புடைநூல் எனினும் சார்புநூல் எனினும் ஒக்கும்.
திரிபாவது 1 படலத்தின் இலக்கணம் ஓத்தில்
கிடக்கவும், 2 படலத்தின்
இலக்கணங்களைத்
தொகுத்து ஒரு சூத்திரத்தில் கிடக்கவும், 3 ஓத்தின்
இலக்கணம் ஒரு சூத்திரத்தில் கிடக்கவும், 4 ஒரு
படலத்தில் கூறும்
இலக்கணம் மற்றொரு படலத்தின் இயைபுநோக்கிக் கிடக்கவும், 5 படலத்து
ஒழிபோடு
பிண்டத்து ஒழிபு சேர்ந்து கிடக்கவும், 6 காலவேறுபாட்டால்
பெறுவனவும் சின்னாள் பல்பிணி சிற்றறிவினோர்க்கு
அறிவுறுத்தற்
பாருட்டுத் தொகைவகை விரிபடச் செய்தலாம்
என்று உணர்க.
அவற்றுள்,
1 - படலத்தின் இலக்கணம் ஓத்தில் கிடத்தலாவது,
ஆசிரியர்
தொல்காப்பியனார் எழுத்ததிகாரத்தில்
கூறிய பொதுவகையான் புணரும்
இயல்பும், விரிந்த
|