பாட்டியல்
- நூற்பா எண் 142 |
321 |
சூத்திரப்
பொருள அன்றித் தொக்குப் புணரும் இயல்பும்,
குற்றியலுகர ஈற்றுச்
சொற்கள் நின்று புணரும் இயல்பும்
இந்நூலுள் உயிரீற்றுப் புணரியலில்
கூறப்படுதலும்;
அவர் சொல்லதிகாரத்தில் கூறிய கிளவியாக்கமும்
வேற்றுமையியலும் வேற்றுமை மயங்கியலும்
விளிமரபும் இதன்கண்
பெயரியலுள் கூறப்படுதலும்;
பொருளதிகாரத்தில் களவியலும்
கற்பியலும்
பொருளியலும் மெய்ப்பாட்டியலும் அகத்திணையியலுள்
கூறப்படுதலுமாம் என்று உணர்க.
2. படலத்தின் இலக்கணங்களை ஒரு சூத்திரத்தில்
தொகுத்தலாவது - எழுத்ததிகாரத்தின்,
‘எண்பெயர் முறை பிறப்பு’
- இ. வி. 8
எனவும்,
சொல்லதிகாரத்தின்,
‘தனிமொழி தொடர்மொழி’
எனவும்,
- இ.
வி. 160
பொருளதிகாரத்தின்,
‘போக்கறு மரபின் பொருளெனப் படுவது’
- இ. வி. பொ. 2
எனவும்
கூறலாம் என்று உணர்க.
3. ஓத்தின் இலக்கணம் ஒரு சூத்திரத்தில் கிடத்தலாவது,
‘மொழிக் காரணமாம்’
- இ. வி. 3
எனவும்,
‘எழுத்தே தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும்’
- இ. வி. 38
எனவும்,
41-42
|