322                      இலக
322

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     மெய்உயிர் முதல்ஈறு ஆம்இரு பதங்கள்’              - இ. வி.53

 

   எனவும்,

 

     ‘பெயர்எனப் படுபவை தெரியுங் காலை’              - இ. வி.176

 

   எனவும்,

 

     ‘வினைஎனப் படுவது வேற்றுமை கொள்ளாது’          - இ. வி.227

 

   எனவும்,

 

     ‘வேற்றுமை வினைசாரியை ஒப்பு உருபுகள்’            - இ. வி.251

 

   எனவும்,

 

     ‘குறிப்பும் பண்பும் இசையும் தோற்றி’                 - இ. வி.280

 

        எனவும்,

 

     ‘அதுவே, கைக்கிளை ஐந்திணை’                     - இ. வி.376

 

   எனவும்,

 

     ‘வெட்சி வஞ்சி உழிஞை தும்பை’                   - இ. வி. 600

 

  எனவும்,

 

     ‘அணி எனப் படுவது’                            - இ. வி. 620

 

  எனவும்,

 

     ‘செய்யுள் என்பது’                               - இ. வி. 710

 

  எனவும்,

 

     ‘எஞ்சிய இலக்கணம்’                              - இ. வி.761

 

  எனவும் கூறப்படுதலாம் என்று உணர்க.

 

     4. ஒரு படலத்தில் கூறும் இலக்கணம் மற்றொரு படலத்தில் கூறலாவது - செய்யுளியலுள் கூறவேண்டும் ஒற்றளபெடையை எழுத்தியலுள் கூறலாம் என்று உணர்க.