பாட்டியல்
- நூற்பா எண் 142 |
323 |
5. படலத்து
ஒழிபோடு பிண்டத்துஒழிபு சேர்தலாவது இவ்வோத்துள்
கூறப்படும் பாட்டின் இயல் முதலிய ஏழும் படலத்துஒழிபு
எனவும், மரபு
முதலிய ஏழும் பிண்டத்துஒழிபு எனவும் சேர்ந்து
நிற்றலாம் என்று உணர்க.
கரம்மொழிக்கு முதலாம் எனக் கூறுதலும், (இ . வி. 27)
‘சொல்வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல்’
- தொ. சொ. 463
என
ஆசிரியர் தொல்காப்பியனார் பாதீடு இட்ட
சொல்லை விகுதிப்புணர்ச்சி
என விரித்துக்
கூறுதலும், அவர் உவமம் ஒன்றனையே கூறி ஒழிய இவர்குணவணி
என்றும் பொருளணி என்றும் சொல்லணி என்றும்
முதல்நூல் வழிநூல் சார்புநூல் இலக்கணம் கூறுதலான்,
முதல் நூலில் வழிநூல் சார்புநூற்கு இலக்கணம் பெறாமையும்
அறிக.
(142)
விளக்கம்
பாதீடுஇடுதல்
- பகுத்துக் கூறுதல்.
முதல் நூலில் வழிநூல் இலக்கணம் கூறப்படமாட்டாது.
வழிநூலில் முதல்நூல், வழிநூல் இலக்கணம் கூறப்படுமே
ஒழியச் சார்புநூல் இலக்கணம் கூறப்படமாட்டாது.
சார்புநூலில் முதல், வழி, சார்பு என்ற மூவகை நூலிலக்கணமும்
கூறப்பெறும்.
|