324                      இலக

324 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


              

    தமிழில் முதல்நூல் இப்பொழுது இல்லை. ஆதலின் அதன் கண் வழிநூல்
இலக்கணம் கூறப்பெறவில்லை என்பதை எடுத்துக் காட்டுதல் இயலாது. வழிநூலாகிய

தொல்காப்பியத்தில் முதல் நூல் இலக்கணமும் வழிநூல் இலக்கணமும்
கூறப்பட்டுள்ளன.

 

   சார்பு நூலாகிய நன்னூல் முதலியவற்றில் மூவகை நூல் இலக்கணமும்
காணப்பெறும்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

முழுதும் - நன். 8

 

     ‘இவ்வகைப் பனுவலோடு ஒத்துஇழுக்கு இன்றாய்ச்

     செவ்விதின் சிறிது திரிவது சார்பே.’                          

   - மாறன். 10

                                                                      142

உரைவகை நான்கு

 

903. பாட்டிடை வைத்த குறிப்பி னானும்

    பாவின்று எழுந்த கிளவி யானும்

    பொருளொடு புணராப் பொய்மொழி யானும்

    பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்என்று

    உரைவகை நடையே நான்குஎன மொழிப.

 

இது மேல் நிறுத்தமுறையானே உரைச் செய்யுள் ஆமாறும் அதன் பகுதியும்
கூறுகின்றது.

 

     இ - ள்: ஒரு பாட்டின் இடையிடைக் கொண்டு நிற்கும் கருத்தான் வருவன
உரை எனப்படும். என்னை? பாட்டுறுவது சிறுபான்மை ஆகலின்; அவை தகடூர்

யாத்திரை போல்வன. மற்றுப் பிரபாடை விரவி வருவனவோ எனின், அவற்றுள்ளும்
தமிழ் உரை ஆயின ஈண்டு அடங்கும். பிறபாடைக்கு ஈண்டு ஆராய்ச்சி இன்று.