பாட்டியல்
- நூற்பா எண் 143 |
325 |
பாஇன்று எழுந்த கிளவி - பாட்டின்றிச் சூத்திரத்திற்குப்
பொருள்
எழுதுவன போல்வன; சூத்திரம் பாட்டு எனப்படாவோ
எனின், படா;
‘பாட்டும் உரையும் நூலும்’ (தொல்.
பொ. 391) எனவேறு
ஓதினமையின்.இதனால் போந்தது,
சொற்சீரடியான் இற்ற சூத்திரம்
உரைச்செய்யுள்
என்பதாம்.
பொருளொடு புணராப் பொய்மொழி - பொருள் இன்றிப்
பொய்படத்
தொடர்ந்து சொல்லுவன.
பொருளொடு புணர்ந்த நகைமொழி - பொய்எனப்படாது
பொருளொடு
பட்டு நகுதற்கு ஏதுவாகும் தொடர்நிலை.
இந்நான்கும் உரைச்செய்யுள் என்று கூறுவர்
புலவர் என்றவாறு.
‘வகை’ என்றதனால் இவ்வுரைப்பகுதி பிறவும்உள.
அவை மேல் பாயிரத்துள்,
‘பொழிப்பே அகலம் நுட்பம் எச்சம்எனப்
பழிப்பில் சூத்திரம் பன்னல் நான்கே.’
என்றதனால்
பெறப்பட்டன.
(143)
விளக்கம்
நிறுத்தமுறை - இவ்வியல் முதல் நூற்பாவில் நிறுத்தியமுறை.
தொடர்நிலைச் செய்யுளில் இடை இடையே செய்யுளைவிட
உரைநடை
மிகுதியாக வரையப்பட்டுப் பொருள் புலப்படுத்தும்
நூல்கள் தகடூர்
யாத்திரைபோல அருகியிருந்தன. இப்பொழுதும் சிலப்பதிகாரத்தில்
சிறுபான்மை உரைநடை விரவி
வந்துள்ளதைக் காண்கிறோம். தமிழ்
உரைநடை
விரவுதலே ஏற்றது. இது முதல்வகை உரைப்பகுதி.
|