326                      இலக
326

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     பாட்டு அடிவரையறை உடையது. நூல் உரை முதலியன அன்னஅல்ல.
எனவே, வேற்றுவன் சூத்திரத்தை எடுத்து உரையாக எழுதுதலும்
பாவின்றெழுந்த கிளவியாய்  உரைச் செய்யுள் என அடங்கும்.
 
     பொருளொடு புணராப் பொய்மொழியாவது - ஓர் யானையும் ஒரு
குதிரையும்  தம்முள் நட்பாடி இன்னுழிச்சென்று இன்னவாறு செய்தன என்று
அவற்றுக்கு இயையாப் பொருள்படத் தொடர் நிலையான் ஒருவனுழை
ஒருவன்கற்று வரலாற்று முறையான் வருவது போல்வது.
 

     பொருளொடு புணர்ந்த நகைமொழி - அவையாவன சிறுகுரீஇ
உரையும் தந்திரவாக்கியமும் போல்வன. இவற்றுள் சொல்லப்படும் பொருள்
பொய் எனப்படாது, உலகியலாகி, நகைதோற்றும் என்பது.

 

     வகை என்றதனால், பொழிப்புரை, அகலவுரை, நுட்பஉரை, எச்சவுரை
போல்வனவும் கொள்ளப்படும்.

 

     இந்நூற்பா தொல்காப்பியப் பொருளதிகாரத்து 485-ஆம் நூற்பா. உரை
பெரும்பாலும் பேராசிரியர் உரையே. இனி உரையாசிரியர் ‘பல சொல்

தொடர்ந்து பொருள் காட்டுவனவற்றுள் ஓசை தழீஇயவற்றைப் பாட்டு
என்றார். ஓசை இன்றிச் செய்யுள் தன்மைத்தாய் வருவது நூல் எனப்பட்டது.

 

     அவ்வகையும் அன்றி வரும் உரைத்திறன் ஈண்டு உரை யெனப்பட்டது

 

 

     ‘இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து.’         - கலி. 56

 

     ‘கடியர்தமக்கு யார்சொலத் தக்கார் மற்று’             - கலி. 88

 

  என்பன உரைக்குறிப்பு.

 

     சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையுள்,