பாட்டியல் - நூற்பா எண் 143 

 327


    

      ‘கயலெழுதிய இமய நெற்றியின்

      அயலெழுதிய புலியும் வில்லும் ..............

      மடைமுதுமகள் வந்து தோன்றும்மன்.’

  என்பதும் அது

 

      பாவின்று எழுந்த கிளவி வழக்கின்கண் ஒரு பொருளைக் குறித்து
வினவுவாரும் செப்புவாரும் கூறும் கூற்று. அதுவும் இலக்கணம் பிழையாமல்
கூற வேண்டுதலானும், ஒரு பொருளைக் குறித்துச் செய்யப் படுதலானும்
செய்யுளாம்.

 

     நகை மொழியாவது மேல் சொல்லப்பட்ட உரை பொருந்தாது என
இகழ்ந்து கூறுதல். அவ்விகழ்ச்சியின் பின்னர்ப் பொருள் உணர்த்தும் உரை
பிறக்கும் ஆதலின் பொருளொடு புணர்ந்த நகை மொழியானும் உரை வரும்என்றார்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

     பின் இரண்டு உரைவகையும் செவிலிக்கே உரிய. முன்னிரண்டும்
எல்லோர்க்கும் உரிய என்றார் தொல்காப்பியனார்.

 

     இந் நூலார் இவற்றைக் குறிப்பிடுவது தேவையற்றது என்பது குறித்து
உணரப்படும்.

 

   ஒத்த நூற்பா

 

  முழுதும் - தொல். 485 பேரா.

                                                            143

பிசியின் வகை

 

904. ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும்

    தோன்றுவது கிளந்த துணிவி னானும்

    என்றுஇரு வகைத்தே பிசிவரு நிலையே.

 

இது பிசி ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: ஒப்புமையொடு பொருந்திய வரும் உவமைப் பொருளானும்
ஒன்று சொல்  ஒன்று தோன்றுதல் துணி