328 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
வுடையவாகச்
சொல்லும் சொல்லானும் என இரு கூறுபாடு உடைத்து பிசி
தோன்றும் நிலை என்றவாறு.
ஒப்பொடு புணர்ந்த உவமம் - ‘பிறை கவ்வி மலை
நடக்கும் என்பது
யானை எனவும்,
‘முத்துப்போல் பூத்து முதிரின் களாவண்ணம்
நெய்த்தோர் குருதி நிறங்கொண்டு வித்துதிர்ந்து’
என்பது
கமுகு எனவும் வரும்.
தோன்றுவது கிளந்த துணிவு என்பது,
‘நீராடான்
பார்ப்பான் நிறம்செய்யான் நீராடின்
ஊராடு நாட்டிற் காக் கை.’
இது
நெருப்பு என்றாவது,
பிசி நிகிர்தம் என்பன
ஒரு பொருட் கிளவி.
(144)
விளக்கம்
பிசி என்பது விடுகதை.
உவமம் பற்றிய பிசி - ‘பிறை கவ்வி’ ‘முத்துப்போல்
பூத்து’ என்பன.
ஒன்று சொல்லி வேறு ஒன்றனை அறிவதற்குக்
கருவியை உள்ளடக்கிச்
சொல்லும் பிசி ‘நீராடான்
பார்ப்பான்’ என்பது.
இந் நூற்பா தொல்காப்பியப் பொருட்படல 488ஆம்
நூற்பா. உரை
பேராசிரியர் உரை. இதுவும் செவிலிக்கு
உரித்து என்பது பேராசிரியர்
கருத்து.
ஒத்த
நூற்பா
முழுதும்
- தொல். பொ. 488 பே.
144
|