பாட்டியல் - நூற்பா எண் 145   

   329


 

முதுமொழி இலக்கணம்

 

905. நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்

    மென்மையும் என்றுஇவை விளங்கத் தோன்றிக்

    குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

    ஏது நுதலிய முதுமொழி என்ப.

 

இது முதுமொழி ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள்: நுண்ணிய பொருளுடைமையும், எழுத்தானும் சொல்லானும்
சுருக்கம் உடைமையும், எல்லாச் சமயத்தாரானும் கூறும் பொருள்களில் தான்
சென்று விளங்குதல் உடைமையும், அறிவோர்க்குப் பிரவேசிக்க எளிதாதல்
உடைமையும், என்று கூறப்படும் இந் நான்கும் தோன்ற எப்பொருளும்

தன்னகத்து அடங்கத் தான் மேற்பட்டுப் பிரதிக்கினை மாத்திரத்தான் கருதிய
பொருளை முற்றுவிக்க அவாய்நிலை தோன்றியவழித் தோன்றும்
காரகமாக வரும் திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்னும் வாக்கியங்களை
உட்கொண்டு வாரா நிற்கும் ஏதுப்பொருளைக் கருதியனவே முதுமொழிச்
செய்யுள் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

 

     இவற்றின் விகற்பம் எல்லாம் அளவை நூல் முகத்தான் ஆராய்ந்து
அறிக.

 

     அளவையும் பொருட்கூறாகலான் ஆசிரியர் தொல்காப்பியனார்
பொருளதிகாரத்தில் படலத்து ஒழிபாக அடக்கிக் கூறினார். மூன்றாம்
வேற்றுமைக்கும் ஐந்தாம் வேற்றுமைக்கும் ஆசிரியர் அகத்தியனார்
ஏதுப்பொருள் கூறினமையான் ‘அதர்ப்படயாத்தல்’ என்பதனான்
இந்நூல் உடையாரும் ஆசிரியர் தொல்காப்பியனார்