332
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
கண்டுகொள்க.
இதுவும் இந்நாற் பகுதித்து என்றவாறு’ என்று உரை
வரைந்துள்ளார்.
இவ்வுரை பொருளொடு புணர்ந்த நகைமொழிக்கண்
அடங்குதல் கூடும்.
மேலும் ஏதுவிற்கும் விளக்கம்
தரும் அளவை நூற்கருத்தும் சுட்டப்படல்
வேண்டும்.
ஆதலின் பேராசிரியர் உரையை விடுத்து இந்நூலார் தாமே
தம்
புலமைதோன்ற மேம்பட்ட உரை வரைந்துள்ள திறம்
நோக்குக.
ஒத்த
நூற்பா
முழுதும் - தொல். பொருள் 489.பே. 145
மந்திரத்தின்
இலக்கணம்
906.
நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.
இது
மந்திரச் செய்யுள் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப்
பயன்களைப
பயக்கும் நிறைந்த மொழியை உடைய குரவர்தாம்
அனுபவத்தால் அறிந்த
பொருளைப் பிறருக்கு உணர்த்தல்
ஆகாமையான், அவர்க்குப் பயப்பாடு
நோக்கி, ஆக்கினையான்
மறைந்த பொருளைக் கூறப்பட்ட செய்யுளே
மந்திரச்செய்யுள்
என்றவாறு.
செய்தலினால் சொல்லும் செய்யுளாதல் பெற்றாம்.
சொல் எனவே, ஓர்
எழுத்தொருமொழியும் ஈரெழுத்தொருமொழியும்
தொடர்மொழியும் கொள்க.
அவை மந்திர மொழி வல்லார்வாய்க்
கேட்டு உணர்க.
இச் சூத்திரமும் மேலைச் சூத்திரமும் ஆசிரியன்
கூற்று. (146)
|