பாட்டியல்
- நூற்பா எண் 146 |
333 |
விளக்கம்
சான்றோர் பல்லாண்டு தாம் அநுபவத்தால் அறிந்தவற்றை
உலகம்
கொண்டு பயன்படல்கருதிக் கூறிய செய்யுளே
மந்திரமாகும். பேராசிரியர்
உரையில் கூறும் வசைப்பாடல்களை
விடுத்து உலக வாழ்விற்குக் கூறிய
செய்திகளையே
இவர் மந்திரம் என்றார். மந்திரங்கள் உபதேச
வாயிலாக
அறியப்படுவனவாதலின் அவற்றிற்கு உதாரணம் காட்டாது. மந்திரம்
வல்லார்வாய்க் கேட்டு
உணருமாறு கூறினார்.
‘என்ப’ என்ற தொடர்கொண்டு இந் நூற்பாவும்
சென்ற நூற்பாவும்
அகத்தியனார் கூற்றாக இவ்வாசிரியர்
கொண்டுள்ளார் போலும்.
ஒத்த
நூற்பா
முழுதும்
- தொல். பொ. 490 பே.
146
குறிப்பு
மொழி இலக்கணம்
907.
எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப.
இது
குறிப்பு மொழி ஆமாறு கூறும் முகத்தான் எய்தாதது எய்துவிக்கின்றது;
சொல்லால்பொருள் உணர்த்தலே அன்றிப் பொருளானும்
சொல்
பெறப்படுதலின்.
இ - ள்: எழுத்தினோடும் சொல்லினோடும் புணராதாகிப்
பொருட்கண
அபிநயத்தில் கிடப்பனவே
குறிப்புச்சொல்லாம் என்று கூறுவர் ஆசிரியர்
என்றவாறு.
வரலாறு:
‘வரு
கோவைச் சூடி வளைகோவை சாத்தி
ஒரு கோவை ஏறிஉயர் கோவை - தருகோவைக்
கைக்கோவை ஆய்ந்துரைத்தார் காண்பார்க்குக்
காணாதார்க்கு
இக் கோவை ஆய்ந்துரைத்தார் ஈங்கு.’
|