334                      இலக
334

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

      கோ என்பது பலபொருள் ஒரு சொல்லாய் நீரையும் திசையையும்
இடபத்தையும் சுவர்க்கத்தையும் கூற்று மொழியையும் குறிப்புமொழியையும்
உணர்த்தும் ஆகலான்;
 

       ‘உயர்கோவை ............... காண்பார்க்கு, என்பதற்குப் பொருள்
மேலான சீபாதத்தை வேண்டினவர்களுக்குக் கொடுக்கின்ற உபதேசமாகிய
சம்பிரதாய வாக்கின் பொருளை அறியவேண்டும் என்று கருதும்
முனிவர்க்குப் பாகம் பிறந்தது கண்டு போதமுத்திரையான் உணர்த்தல் கருதி,
அபிநயம் என்னும் கை வேறுபாட்டால் காட்டவும் காணவும் படும்
குறிப்புமொழிகளை, ஆராய்ந்து சேர்த்துக் காட்டிய இறைவன் என்பது
காண்க.

 

     பாடமும் கூற்றும் ஆசிரியர் கண்ண ஆகலான் பரந்து பட்ட நூலில
 சிதர்ந்து கிடக்கின்ற பொருளை, ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்குஒப்பத்தொகுத்து அடைவாக, முன்னுரையில் பெறாமல் அரிதாக
நின்ற பொருளை, எளிதாக அறியுமாறு, தேடிவைத்த தொகுதி, தானம்
வெளித்தோன்றிப் பயன்படுமாறுபோல, இந்நூலுடையார் கண்டு கூறினார்.
இவ்வாறு பொருள் கூறுதல் ஆசிரியர் கருத்துக்கு ஒப்பு என்பது
செய்யுட்கோவை உரையான் உணர்க. இக்கருத்தே பற்றி அன்றே தென்னவன்
பிரமராயரும்,

 

     ‘வாக்கு மனம் கழிய நின்ற மறை’

  என்றார்.

     நக்கீரனாரும்,

 

    ‘எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்

    திங்கள் போலத் திசை விளக் கும்மே’                 

 - திருமுருகு. 97-98

 

எனக்கூறிய திருமுகத்திற்கு ஏற்ப,